அண்ணனுக்கு அதிக சொத்து கொடுத்த பெற்றோரை தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவிய தம்பி

 
murder

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், காவலியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் இளைய மகன் லட்சுமி நாராயணா கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய சொத்து முழுவதையும் மகன்கள்  இருவருக்கும் பிரித்து கொடுத்துவிட்டார். அதில் மூத்த மகனுக்கு பிரித்து கொடுக்கப்பட்ட சொத்து தற்போது சந்தை மதிப்பு உயர்வு காரணமாக அதிக விலைக்கு உள்ளது. எனவே எப்படியாவது தன்னுடைய அண்ணனுக்கு பிரித்து கொடுத்த சொத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று லட்சுமி நாராயணா முடிவு செய்தார்.

காஞ்சிபுரத்தில் திமுகவினர் இருக்கிறியே வெட்டுக்குத்து. வெட்டு பட்டவர்கள்  அனைவரும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ...

இதற்கு தந்தை பாலகிருஷ்ணா, தாய் மற்றும் அண்ணன் ஆகியோர் தடையாக இருப்பதாக அவர் கருதினார். எனவே முதலில் தந்தை, தாய் இரண்டு பேரையும் கொலை செய்து அதன் பின்னர் அண்ணனையும் கொலை செய்ய அவர் திட்டமிட்டு இருந்தார். இதற்காக தனது நண்பரான காவலியை சேர்ந்த சுப்பா ராவிடம் தெரிவித்தான். இதனையடுத்து சுப்பாராவ் பழைய குற்றவாளியான ஷேக் சபியுல்லா என்பவரிடம் லட்சுமி நாராயணா  பெற்றோரை கொலை செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதற்காக தந்தையை கொலை செய்தால் ரூ,3 லட்சமும் அவருடன் சேர்த்து தாயையும் கொலை செய்தால் 5 லட்சம் ரூபாய் தருகிறேன் என்றார். இவை சமுகமாக முடிந்தால்  அதன் பின்னர் அண்ணனையும் கொலை செய்ய வேண்டும் அதற்கு தனியாக பணம் தருகிறேன் என்று பேசி முடித்தார்.

இதற்காக ரூ.30 ஆயிரம்  லட்சுமி நாராயணா முதல் தவணையாக ஷேக் ஷபியுல்லாவிடம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்ட  ஷேக் சபியுல்லா சிறையில் இருந்து வெளியே வந்த சிறை நண்பர்களான ஷேக் கவுல் பாஷா, ஷேக் சாகுல் ஆகியோருடன் பேசி பாலகிருஷ்ணா அவருடைய மனைவி  ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதற்காக சபியுல்லா, கவுல் பாஷா, சாகுல் ஆகியோர் லட்சுமி நாராயணன் உடன்  சேர்ந்து மூன்று முறை ஒத்திகை பார்த்துள்ளனர். இந்நிலையில் திருட்டு வழக்கு ஒன்றில் கவுல் பாஷா, சாகுல் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.அப்போது ஷேக் சபியுல்லாஹ் ஏற்பாட்டின் பேரில் பாலகிருஷ்ணாவை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது பற்றி போலீசார் நடத்திய  விசாரணையின் போது உண்மையை கூறினர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் லட்சுமி நாராயணா, ஷேக் சபியுல்லாஹ், ஷேக் கவுல் பாஷா, சேக் சாகுல் அவர்களுடைய நண்பரான சுப்பாராவ் ஆகியோரை பாலகிருஷ்ணய்யாவிடம் புகார் பெற்று கைது செய்து  சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஷேக் ஷாகுல், ஷேக் கவுல் பாஷா ஆகியோர் திருடி வைத்திருந்த ₹ 2.95 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், ஒரு அறிவாள் ஆகிவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.