5 மணிநேர தொடர் கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு..

 
5 மணிநேர  தொடர் கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு..

கர்நாடக மாநிலத்தில் 5 மணிநேரம் கொட்டிய தொடர் கனமழையால் தலைநகர் பெங்களூரு வெள்ளத்தில் மிதக்கிறது.  

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 மணி நேரம் தொடர்ந்து கனமழை கொட்டியது. இதனால் பெங்களூரு - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இடுப்பு அளவிற்கு மழை நீர் தேங்கியது. அதேபோல் மராத்தஹள்ளி - சர்ஜாபூரா அவுட்டிங் ரிங் ரோடு உள்ளிட்ட பல சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

5 மணிநேர  தொடர் கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு..

இதே போல் வீடுகள்,  அடுக்குமாடி குடியிருப்புகளின் அடித்தளங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. சிறிய தெருக்கள்  முதல் தேசிய நெடுஞ்சாலைகள் வரை வெள்ளநீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   இதன் காரணமாக பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் மழை நீர் புகுந்து விட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். ஆங்காங்கே பேருந்துகள் சாலையில் தேங்கி இருக்கும் மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது. வடமொழி மற்றும் வெள்ளம் காரணமாக பெங்களூரில் பல்லு கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன் அவசர தேவைகள் தவிர மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

5 மணிநேர  தொடர் கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு..

மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.  அத்துடன் பெங்களூரு புறநகரில் உள்ள ஐடி நிறுவனங்களிலும் வெள்ள நீர் புகுந்து சேதப்படுத்தியுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெங்களூரு நகரும் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வெள்ளத்தில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 30ஆம் தேதி பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  அதேபோல் தற்போது மீண்டும் பெய்த கனமழை காரணமாக பெங்களூரு முழுவதுமாக வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் வருகிற 7ம் தேதி வரை பெங்களூரு,  பெங்களூரு புறநகர் பகுதிகள் , சிக்கபல்லாபூர் , சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவாங்கரே, ஹாசன், கோலார், ராமநகரா, குடகு, சாமராஜா நகர், மாண்டியா, மைசூர், ஷிமோ கா, தும்கூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த முதலமைச்சர் பாசவராஜ் பொம்மை,  வெள்ள சேத பாதிப்புகளை கணக்கிடும்படி வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.