5 ஏர் இந்தியா விமானிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

 

5 ஏர் இந்தியா விமானிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

5 ஏர் இந்தியா விமானிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: 5 ஏர் இந்தியா விமானிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் மருந்து பொருட்களை கொண்டு வந்த 5 ஏர் இந்தியா விமானிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விமானிகள் சமீபத்தில் சீன நகரமான குவாங்சோவுக்கு சரக்கு விமானங்களில் ஒன்றை இயக்கியிருந்தனர்.

air india

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து ஏர் இந்தியா நிறுவனம் சர்வதேச இடங்களுக்கு சரக்கு விமானங்களை இயக்கி வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் ஏப்ரல் 18 அன்று டெல்லியில் இருந்து குவாங்சோவுக்கு போயிங் 787 ரக விமானங்கள் மருத்துவப் பொருட்களை எடுத்துச் சென்றன. ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கிற்கும் மருத்துவ சரக்கு விமானங்களை ஏர் இந்தியா விமான நிறுவனம் இயக்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது.