பரபரப்பு சம்பவம்! போலீசாரின் என்கவுன்டரில் 4 பேர் சுட்டுக்கொலை!

 
shooting

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் போலீசாரின் என்கவுன்டரில் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரை பிடிப்பதற்காக போலீசார் சென்றிருந்தனர். அப்போது காவலர்களை பார்த்து குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை சுதாரித்துக்கொண்ட காவலர்கள் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் காவல் ஆய்வாளர் ஒருவரும் படுகாயம் அடைந்தார். போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பியோட முயற்சித்த நிலையில், தற்காப்புக்காக 4 பேரையும் என்கவுண்டர் செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.