படமெடுத்து ஆடிய நாகத்திடமிருந்து 30 நிமிடம் போராடி குடும்பத்தினரை காப்பாற்றிய செல்லப்பூனை

 

படமெடுத்து ஆடிய நாகத்திடமிருந்து 30 நிமிடம் போராடி குடும்பத்தினரை காப்பாற்றிய செல்லப்பூனை

வீட்டின் எஜமானர்களை பாம்புகளிடம் இருந்து பல செல்லப்பிராணிகள் காத்திருக்கின்றன. பாம்புகளிடம் இருந்து பாதுகாக்கும் போராட்டத்தில் எத்தனையோ செல்லப்பிராணிகள் உயிரிழந்துள்ளன.

படமெடுத்து ஆடிய நாகத்திடமிருந்து 30 நிமிடம் போராடி குடும்பத்தினரை காப்பாற்றிய செல்லப்பூனை

பெரும்பாலும் பாம்புகளிடம் சண்டையிட்டு எஜமானர்களை நாய்கள் மட்டுமே அதிகம் காப்பாற்றி இருக்கின்றன. பூனைகளும் அந்த செயலை செய்வதுண்டு. பெரும்பாலும் பூனைகளை நாகப்பாம்பு கொன்றுவிடும். ஆனால், தனக்கும் எந்த சேதமும் இல்லாமல் எஜமானர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் படமெடுத்து ஆடிய நாகப்பாம்பிடம் சண்டை போட்டிருக்கிறது ஒன்றரை வயது ஆண் பூனை. சுமார் 30 நிமிடங்களாக இந்த போராட்டம் நீடித்திருக்கிறது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பீமதங்கி பகுதியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

படமெடுத்து ஆடிய நாகத்திடமிருந்து 30 நிமிடம் போராடி குடும்பத்தினரை காப்பாற்றிய செல்லப்பூனை

வீட்டுக்குள் நின்றிருந்த செல்லப்பூனை ’சினு ’விருட்டென்று வாசலுக்கு ஓடியிருக்கிறது. அந்த பூனையை பாசமாக வளர்த்து வரும் சம்பத் குமார் பரிதா, ஏன் இப்படி வேகமாக ஓடுகிறது சினு என்று போய் பார்த்திருக்கிறார். அப்போது வீட்டிற்குள் நுழைய முயற்சித்த 4 அடி நாகப்பாம்பினை பூனை எதிரே நின்று தடுத்துக்கொண்டிருந்தது. பாம்பு படமெடுத்து ஆடவும், எதிரே நின்று சீறியபடியே அதை உள்ளே நுழையவிடாமல் தடுத்திருக்கிறது.

உடனே பரிதா வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வனத்துறையில் இருந்து தன்னார்வலர் அருண்குமார் பரால் விரைந்து வந்துள்ளார். அவர் பாம்பிற்கு முன்னால் நின்று வீட்டிற்குள் நுழைவதை தடுக்க பூனை முயற்சித்து வருவதை கண்டிருக்கிறார்.

இதையடுத்து முதலில் அந்த சினு பூனையை அந்த இடத்தில் இருந்து விலக்கிவிட்டு, பின்னர் நாகப்பாம்பினை லாவகமாக மீட்டிருக்கிறார். ’’நாகம்பாம்பிடம் இருந்து அரை மணி நேரமாக போராடியும் பூனைக்கு எந்த காயம் இல்லை. மிக எச்சரிக்கையாக பாம்பிற்கு முன்னால் நின்று சண்டை போட்டிருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார் அருண்குமார் பரால்.

படமெடுத்து ஆடிய நாகத்திடமிருந்து 30 நிமிடம் போராடி குடும்பத்தினரை காப்பாற்றிய செல்லப்பூனை

வனத்துறை பொதுச்செயலாளர் சுபேந்து மல்லிக், ’’பூனையின் உடலை மருத்துவர்கள் முழுமையாக பரிசோதித்தார்கள். பூனைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். மேலும், ’’பூனைகளும், நாய்களும் தங்கள் உரிமையாளர்களுக்கு விசுவாசமாக இருக்கின்றன. மீண்டும் மீண்டும் செல்லப்பிராணிகள் தங்கள் உரிமையாளர்களின் சிறந்த காவலர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

’’பூனையை கொல்லும் திறன் கொண்டது நாகம். அப்படி இருந்தும் நாகப்பாம்பினை எதிர்த்து நின்று தைரியம் காட்டியிருக்கிறது பூனை’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.