திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணம்; மூன்றாவது அலையின் தொடக்கமா?!

 

திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணம்; மூன்றாவது அலையின் தொடக்கமா?!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 309 பேர் கொரோனாவுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்தது. குறிப்பாக கேரள மாநிலத்தில் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்திருந்தது. நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக, இந்தியாவின் மொத்த பாதிப்பு 40 ஆயிரத்தை எட்டிய நிலையில் கேரளாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணம்; மூன்றாவது அலையின் தொடக்கமா?!

இந்த நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் 30,773 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 309 பேர் பலியாகியுள்ளனர். 38,945 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 3,32,158 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 3,34,48,163. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,44,838. இதுவரை 3,26,71,167 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.