நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழப்பு- பீச் ரிசார்ட்டில் நடந்த சோகம்

 
ச்

கர்நாடக மாநிலம் மங்களூரு  அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் உல்லல் என்ற இடத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உச்சிலா கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள ஒரு தனியார் பீச் ரிசார்ட்டில் நிகழ்ந்த இந்த விபத்தில் மைசூரை சேர்ந்த  நிஷிதா, பார்வதி மற்றும் கீர்த்தனா என்ற இளம் பெண்கள் பலியாகினர். 6 அடி ஆழ நீச்சல் குளத்தில் முதலில் ஒருவர் மூழ்கிய நிலையில், காப்பாற்ற முயன்று மற்ற இருவரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ரிசார்ட் ஊழியர்கள் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வார விடுமுறையை கொண்டாட சென்ற பெண்களுக்கு நேர்ந்த இந்த கொடுமையால் சக தோழிகள் துக்கத்தில் உள்ளனர். உயிரிழந்தவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.