பெங்களூருவில் பயங்கர குண்டுவெடிப்பு… 3 பேர் பலி; நால்வர் படுகாயம்!

 

பெங்களூருவில் பயங்கர குண்டுவெடிப்பு… 3 பேர் பலி; நால்வர் படுகாயம்!

பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். பெங்களூரு புதிய தரகுப்பேட் பகுதியிலுள்ள போக்குவரத்து குடோனில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என்று சொல்லப்படுகிறது. குண்டுவெடிப்பின்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் சேமிப்பு கிடங்கிலிருந்து சாலைகளுக்கு வீசப்பட்டுள்ளன. இதில் 10 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு லாரி சேதமடைந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் பயங்கர குண்டுவெடிப்பு… 3 பேர் பலி; நால்வர் படுகாயம்!

சேமிப்பு கிடங்கு அருகே வாகனங்கள் பழுது பார்க்கும் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கடையில் வேலை பார்த்து வந்த முரளிதர், ஃபயாஸ், அஸ்லாம் ஆகிய மூவரும் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளனர். இதுதொடர்பாக தெற்கு பெங்களூரு காவல் துறை அதிகாரி ஹரிஷ் பாண்டே கூறுகையில், குண்டுவெடிப்பு சிலிண்டர் எரிவாயு கசிவு, மின் கசிவால் ஏற்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பட்டாசு போன்ற வெடிபொருள் ஒன்றால் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

பெங்களூருவில் பயங்கர குண்டுவெடிப்பு… 3 பேர் பலி; நால்வர் படுகாயம்!

விரிவான விசாரணைக்குப் பின்பே உண்மை தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார். போக்குவரத்து குடோனில் உள்ள பட்டாசு அப்படியே உள்ளது. ஆகவே குண்டுவெடிப்புக்கான சரியான கோணத்தில் விசாரிக்க வேண்டும். இது ஒரு போக்குவரத்து குடோன், இங்கே பட்டாசுகள் எப்படி சேமிக்கப்பட்டன? எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார். இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வெடிகுண்டு வெடித்தது போல் உணர்ந்ததாக கூறியுள்ளனர். 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கட்டடங்களில் நடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.