ஆந்திராவில் 2 ரயில்கள் மோதி விபத்து - பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு!

 
tn

ஆந்திராவின் கண்டகப்பள்ளி அருகே 2 ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டதில்  பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்தது.

ரயில் விபத்து

ஆந்திர மாநிலம் விஜயநகரம் கண்டகபள்ளி அருகே 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. பிரேக் பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விசாகா- ராயகாடா பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. பயணிகள் ரயில் மோதியதில்  பலாசா எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Image

இந்நிலையில்  விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் |2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. பாசஞ்சர் ரயிலில் பயணித்தவர்களின் விவரம் அறிந்து கொள்வதில் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 100 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.