திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் 12,750 பேர் தரிசனம் செய்ய அனுமதி!

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் 12,750 பேர் தரிசனம் செய்ய அனுமதி!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் மூடப்பட்டிருந்தன. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி முதல் சோதனை முறையாக உள்ளூர்வாசிகளுக்கு மட்டும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் 12,750 பேர் தரிசனம் செய்ய அனுமதி!

அதன் படி, ஆன்லைனில் நாளொன்றுக்கு மூன்று ஆயிரம் 300 ரூபாய் டிக்கெட்டுகளும் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் ஆகிய கெஸ்ட் ஹவுஸ்களில் அமைக்கப்பட்டிருக்கும் கவுண்டர்களில் 3 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

சுமார் 6000 பக்தர்கள் வரை தற்போது தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் இன்று முதல் 12,750 பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், ஜூன் 30 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 300 சிறப்பு தரிசனம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.