மக்களே உஷார்…! – இந்தியாவில் உச்சத்திற்கு செல்லும் கருப்பு பூஞ்சை பாதிப்பு!

மக்களே உஷார்…! – இந்தியாவில் உச்சத்திற்கு செல்லும் கருப்பு பூஞ்சை பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கொரோனாவின் தீவிரத்திலிருந்தே இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என மூன்று புதிய தொற்றுகள் ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களே உஷார்…! – இந்தியாவில் உச்சத்திற்கு செல்லும் கருப்பு பூஞ்சை பாதிப்பு!

தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. தென் மாநிலங்களை விட வட மாநிலங்களிலேயே இந்தத் தொற்று அதிகளவில் ஏற்படுகிறது. இதில் இருக்கும் ஒரே ஆறுதல் என்னவென்றால் கொரோனா போல இதற்கு பரவும் தன்மை கிடையாது. தீவிர சர்க்கரை நோயாளிகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், கேன்சர், எய்ட்ஸ் உள்ளிட்ட உயிர்குடிக்கும் நோயுடையவர்கள், நீண்ட நாள் படுக்கையில் இருப்பவர்கள், ஸ்டீராய்டு அதிகம் எடுத்துக்கொண்டவர்கள், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் என தனிப்பட்ட ஆட்களுக்கே ஏற்படுகிறது.

மக்களே உஷார்…! – இந்தியாவில் உச்சத்திற்கு செல்லும் கருப்பு பூஞ்சை பாதிப்பு!

நமது சுற்றுப்புறத்தில் இருக்கும் மியூகோமைகோசிஸ் என்ற பூஞ்சையின் மூலமே தொற்று ஏற்படுகிறது. ஆகவே நமது சுற்றுப்புறத்தையும் நமது வீட்டையும் இயன்ற வரையில் மிகவும் தூய்மையாக வைத்துக்கொண்டாலே இதிலிருந்து தப்பிவிடலாம் மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் துவைக்காமல் ஒரே மாஸ்க்கை போட்டுக்கொள்வது, அதிகப்படியாக ஆவி பிடிப்பதனால் கூட சுவாசப்பாதை பாதிக்கப்பட்டு பூஞ்சை தொற்று உண்டாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மக்களே உஷார்…! – இந்தியாவில் உச்சத்திற்கு செல்லும் கருப்பு பூஞ்சை பாதிப்பு!

நாடு முழுவதும் 11 ஆயிரத்து 717 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே குஜராத்தில் தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 859 பேருக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக மகாராஷ்டிர மாநிலத்தில் 2 ஆயிரத்து 770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 236 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.