1089 காலிப்பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

 
tnpsc


தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக தேர்வுகள் நடத்தி  நிரப்பப்பட்டு வருகின்றன.  குரூப் 1, குரூப் 2 ,  2A, குரூப் 4 , விஏஓ என குரூப் 8 வரை தமிழகத்தில் பல்வேறு படிநிலைகளில் உள்ள அரசுப் பணிகள்,  தேர்வுகள் நடத்தி அதன் மூலம் நிரப்பப்படுகின்றன.    அதன்படி தற்போது   நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் உள்ளிட்ட   1089 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.  இதற்கு  விருப்பதும்,  தகுதியும் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

டிஎன்பிஎஸ்சி

பதவியின் பெயர் :  நில அளவர், வரைவாளர் , அளவர்/ உதவி வரைவாளர்.
மொத்த காலியிடங்கள்: 1089  
நில அளவர் - 794 +4
வரைவாளர்  - 236
அளவர்/ உதவி வரைவாளர். - 55

சம்பளம்   -  மாதம்      ரூ.19500-71900/

அறிவிப்பு  வெளியிடப்பட்ட நாள் -  29.07.2022

விண்ணப்பிக்க கடைசி நாள் - 24.08.2022

தேர்வு நடைபெறும் நாள் -  06.11.2022

தேர்வு முறை - கணினி வழித் தேர்வு ( Online Exam)

கல்வித் தகுதி:  சிவில் இன்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள் (அல்லது) சம்மந்தப்பட்ட தொழிற் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் சான்றிதழ்  பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு

வயது வரம்பு:

நில அளவர்/வரைவாளர் -  01.07.2022 அன்று 32   வயதுக்கும் கீழ்  இருக்க வேண்டும்  .

அளவர்/ உதவி வரைவாளர்  -  01.07.2022 அன்று 37 வயதுக்கும் கீழ்  இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்அருந்ததியர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட  இஸ்லாமிய  வகுப்பினர், சீர்மரபினர்,  ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை .

தேர்வுக் கட்டணம்:  ரூ. 100 ; நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150

மேலும், ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர்,  மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு  தேர்வுக் கட்டணம் இல்லை.  
 
தேர்வு செய்யப்படும் முறை  :  எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்  தேர்வு செய்யப்படுவர்.   மாற்றுத்திறனாளிகளுக்கான4% இட ஒதுக்கீடு உள்பட பிற   இடஒதுக்கீட்டு விதிகளும்   பின்பற்றப்படும்.

விண்ணப்பிக்கும் முறை  :   ஆன்லைனில் http://www.tnpsc.gov.in / http://www.tnpscexams.in ஆகிய  இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.