மோடியின் குழந்தைத்தனமான பேச்சே தோல்விக்கு காரணம்: பாஜகவை வறுத்தெடுக்கும் சிவசேனா

 

மோடியின் குழந்தைத்தனமான பேச்சே தோல்விக்கு காரணம்: பாஜகவை வறுத்தெடுக்கும் சிவசேனா

மோடியின் குழந்தைத்தனமான பேச்சுகள் தற்போது அவருக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது என்பதை 5 மாநில தேர்தல் முடிவுகள் காண்பித்திருப்பதாக சிவசேனா கூறியுள்ளது.

மும்பை: மோடியின் குழந்தைத்தனமான பேச்சுகள் தற்போது அவருக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது என்பதை 5 மாநில தேர்தல் முடிவுகள் காண்பித்திருப்பதாக சிவசேனா கூறியுள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பாஜக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக தான் ஆட்சி செய்த 3 மாநிலங்களை காங்கிரஸிடம் பறிகொடுத்து பரிதாபமாக இருந்து வருகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், பிரதமர் மோடியும், அமித்ஷாவும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சூளுரைத்தனர். ஆனால் தற்போது அவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களிலேயே பாஜக இல்லாத காலத்தை அவர்கள் பார்க்கவேண்டிய நிலைமை வந்துவிட்டது.

தங்களை தவிர்த்து வேறு எந்த கட்சியும் அந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க முடியாது, மக்கள் தங்கள் ஆட்சியை விரும்புகிறார்கள் என்று பாஜகவினர்அவிழ்த்துவிட்ட கட்டுக்கதை தேர்தல் முடிவுகளால் பொய்யாகி இருக்கிறது. வானத்தில் பறந்து கொண்டிருந்த அவர்களை, மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் தரைக்கு இழுத்துள்ளனர்.மத்திய பிரதேசத்தில் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கேட்ட விவசாயிகள் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டனர். இதற்கு மக்கள் தேர்தலில் மூலம் பழிதீர்த்துக்கொண்டார்கள்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியது. ஏராளமானோர் வேலை இழந்தனர். பணவீக்கம் அதிகரித்தது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடியோ உலக அரசியலில் ஈடுபட விமானத்தில் பறந்துகொண்டிருந்தார். விமானம் இந்தியாவில் தரை இறங்கியதும் நேராக தேர்தலுக்காக பிரசாரம் செய்ய கிளம்பினார். மோடியின் குழந்தைத்தனமான பேச்சுகள் தற்போது அவருக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது என கடுமையாக விமர்சித்துள்ளது.