முதலிடத்தைப் பிடித்தது கேரளா! – ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா

முதலிடத்தைப் பிடித்தது கேரளா! – ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா

இந்தியாவில் அதிக கொரோனா நோயாளிகள் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வந்தது. இன்று கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

கேரளாவில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் முதலிடத்தைக் கேரளா பிடித்துள்ளது.
இந்தியாவில் அதிக கொரோனா நோயாளிகள் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வந்தது. இன்று கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

kerala-corona-cases

இதன் மூலம் கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலிடம் என்ற நிலையை கேரளா அடைந்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 843 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேர் இறந்துவிட்டனர். 73 பேர் நலமடைந்துள்ளனர். 750க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.