உத்தரப்பிரதேசத்தில் போலீசார் ஒருவரை காட்டுமிராண்டி தனமாக தாக்கிய அதிர்ச்சி வீடியோ

 

உத்தரப்பிரதேசத்தில் போலீசார் ஒருவரை காட்டுமிராண்டி தனமாக தாக்கிய அதிர்ச்சி வீடியோ

உத்தரப்பிரதேசத்தில் போலீசார் ஒருவரை காட்டுமிராண்டி தனமாக தாக்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

எட்டவா: உத்தரப்பிரதேசத்தில் போலீசார் ஒருவரை காட்டுமிராண்டி தனமாக தாக்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தரையில் படுத்துக் கொண்டு இருக்கும் ஒரு நபரை இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் காட்டுமிராண்டி தனமாக அடித்து சித்திரவதை செய்வதைக் ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் இருந்து செல்போனில் படம்பிடித்துள்ளார்.

இந்த வீடியோ வெள்ளிக்கிழமை படமாக்கப்பட்டதாகவும், கான்ஸ்டபிள்களால் தாக்கப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வீடியோவை சமாஜ்வாடி கட்சி உட்பட பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். ஆரம்பகட்ட தகவல்கள்படி, எட்டாவா போலீசாரால் தாக்கப்பட்ட நபர் சுனில் யாதவ் என்றும், அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அப்பகுதியில் உள்ள கிராமவாசிகளைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். தாக்குதல் மற்றும் தீ வைத்ததாக ஒரு கிராமவாசி புகார் அளித்த பின்னர் அவரைக் கைது செய்யச் சென்றதாக காவல்துறையினர் கூறினர். ஆனால் அவர்கள் கிராமத்தை அடைந்தபோது, இந்த நபர் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.