ஹைதராபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக சொந்த நாட்டிற்கு திரும்பிய வெளிநாட்டினர்

 

ஹைதராபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக சொந்த நாட்டிற்கு திரும்பிய வெளிநாட்டினர்

சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத்தில் இருந்து வெளிநாட்டினர் சொந்த நாட்டிற்கு திரும்பினர்.

ஹைதராபாத்: சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத்தில் இருந்து வெளிநாட்டினர் சொந்த நாட்டிற்கு திரும்பினர்.

ஷம்ஷாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (ஆர்ஜிஐஏ) புதன்கிழமை புறப்பட்ட இரண்டு சிறப்பு பயணிகள் விமானங்களில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளை சேர்ந்த குடிமக்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர்.

சில அமெரிக்க குடிமக்களை ஹைதராபாத்தில் இருந்து திருப்பி அனுப்ப ஏர் இந்தியா ஒரு சிறப்பு விமானத்தை இயக்கியது. டெல்லியில் இருந்து வந்த இந்த விமானம் மாலை 5.50 மணிக்கு ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இது 100 அமெரிக்க குடிமக்களை ஏற்றிக் கொண்டு இரவு 7.23 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டது. இந்த பயணத்தின்படி, விமானத்தின் பயணிகளை டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

airport

ஏர் அரேபியாவால் இயக்கப்படும் மற்றொரு சிறப்பு பயணிகள் விமானம், ஷார்ஜாவிலிருந்து கொச்சின் வழியாக ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, ஹைதராபாத்தில் சிக்கித் தவிக்கும் சில ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்களை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. ஏர் அரேபியா விமானம் ஜி 9-426 கொச்சினிலிருந்து இரவு 7.35 மணிக்கு விமான நிலையத்தில் தரையிறங்கியது. 72 ஐக்கிய அரபு எமிரேட் நாட்டினருடன் இரவு 9.01 மணிக்கு ஷார்ஜாவுக்கு புறப்பட்டது.

இரு விமானங்களின் இந்த பயணிகளுக்கும் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் முழு சுத்திகரிக்கப்பட்ட இடைக்கால சர்வதேச புறப்பாடு முனையம் (ஐ.ஐ.டி.டி) மூலம் சேவை அளிக்கப்பட்டது. இவ்வாறு வெளிநாட்டினரை அனுப்பும் பணிகளுக்காக இந்த விமான நிலையம் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக தெலுங்கானா அரசாங்கத்துடன் அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்கள் மாலை 3 மணி முதல் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வரத் தொடங்கினர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாக்க விமானங்களை கையாளும்போது அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனைகள், சமூக விலகல் முறைகள் அறிவுறுத்தப்பட்டன.