ஹரியானா டிரம்ப் கிராமத்தில் உள்ள கழிவறைகளுக்கு தண்ணீர் இல்லை – கிராம மக்கள் அவதி

 

ஹரியானா டிரம்ப் கிராமத்தில் உள்ள கழிவறைகளுக்கு தண்ணீர் இல்லை – கிராம மக்கள் அவதி

ஹரியானாவில் டிரம்ப் கிராமத்தில் உள்ள கழிவறைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

டெல்லி: ஹரியானாவில் டிரம்ப் கிராமத்தில் உள்ள கழிவறைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதலில் அகமதாபாத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர் பின்னர் ஆக்ராவில் தாஜ்மகாலை பார்த்து விட்டு டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் முதன்முறையாக சந்தித்துக் கொண்ட நிகழ்வின் நினைவாக ஹரியானாவில் இருந்து 12,000 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் ஒன்றிற்கு அதிபர் டிரம்ப் பெயர் சூட்டப்பட்டது.

ttn

திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமமாக இந்த கிராமம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இது டிரம்ப் கிராமம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த கிராமத்தில் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகளுக்கு இலவச கல்வி போன்றவை வழங்கப்பட்டன. இவை கிராமத்து மக்களிடையே நன்மதிப்பை பெற்றன. ஆனால் இங்கு கட்டப்பட்ட கழிவறைக்கு தண்ணீர் வசதி இல்லாத சூழல் தற்போது உருவாகியுள்ளது. பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு கட்டப்பட்ட கழிவறைகள் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பயன்பாடற்று காணப்படுகின்றன. இதுதொடர்பாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.