ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவது தொடர்பான மனு விசாரணையை ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம்

 

ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவது தொடர்பான மனு விசாரணையை ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம்

ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை திங்கட்கிழமை வரை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரிமை திருத்த சட்டம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கொடுத்த போதும் அதனை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஷாஹீன் பாக் போராட்டம்

இந்நிலையில், ஷாஹீன் பாக்  போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உத்தரவு இடக்கோரியும், பொது இடங்களில் எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சிக்கு வெளிப்படையான கட்டுப்பாடுகளுக்கு விரிவான மற்றும் முழுமையான வழிகாட்டுதல்கள் ஏற்படுத்த வேண்டும் என   உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. நந்த் கிஷோர் மற்றும் வழக்கறிஞர் ஒருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ஷாஹீன் பாக் போராட்டம்

இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் வரும் திங்கட்கிழமை வரை அந்த மனு  மீதான விசாரணையை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வரும் 11ம் தேதி வெளிவருகிறது.