வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் காளையை வீழ்த்திய கரடி! சென்செக்ஸ் 72 புள்ளிகள் குறைந்தது!

 

வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் காளையை வீழ்த்திய கரடி! சென்செக்ஸ் 72 புள்ளிகள் குறைந்தது!

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவை சந்தித்தன. 

இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் அதன் பிறகு வர்த்தகம் மந்தமாக இருந்தது. வரும் வியாழக்கிழமையன்று பங்கு முன்பேர வர்த்தகம் கணக்கு முடிக்கப்படும் என்பதால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று தள்ளினர்.

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவை சந்தித்தன. 

இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் அதன் பிறகு வர்த்தகம் மந்தமாக இருந்தது. வரும் வியாழக்கிழமையன்று பங்கு முன்பேர வர்த்தகம் கணக்கு முடிக்கப்படும் என்பதால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று தள்ளினர். மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் அடுத்த மாதம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதனை மனதில் வைத்து முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர்.

sensex

அமெரிக்கா ஈரானின் ராணுவ கம்ப்யூட்டர்களில் சைபர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இது சர்வதேச சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் யெஸ் பேங்க், மகிந்திரா அண்டு மகிந்திரா, டி.சி.எஸ். ஸ்டேட் வங்கி உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஓ.என்.ஜி.சி., டாட்டா ஸ்டீல், வேதாந்தா, பஜாஜ் ஆட்டோ, டெக்மகிந்திரா உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,058 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. இருப்பினும், 1,455 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேசமயம் 190 நிறுவன பங்குகளின் விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.

stock market

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் பட்டியிலடப்பட்டுள்ள நிறுவனங்களின்  பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,50,19,285.26 கோடியாக குறைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அது ரூ.1,50,47,206.54 கோடியாக இருந்தது. ஆக, இன்று  ஒட்டு மொத்த அளவில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.28 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

வர்ததகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 71.53 புள்ளிகள் குறைந்து 39,122.96 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 24.45 புள்ளிகள் வீழ்ந்து 11,699.65 புள்ளிகளில் நிலை கொண்டது.