வங்கமொழியில் முழக்கம்: பிரபல நடிகைகள் எம்பிகளாக இன்று பதவியேற்பு!

 

வங்கமொழியில் முழக்கம்: பிரபல நடிகைகள் எம்பிகளாக இன்று பதவியேற்பு!

நடிகை நுஸ்ரத்தும் அவரது தோழி மிமி சக்ரவர்த்தியும்  மக்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்

புதுடெல்லி: நடிகை நுஸ்ரத்தும் அவரது தோழி மிமி சக்ரவர்த்தியும்  மக்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்

பிரபல வங்காள நடிகை நுஸ்ரத் ஜஹான். முன்னணி நடிகைகளுள்  ஒருவராக வலம்வந்த இவர் மக்களவைத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஷிர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
இதையடுத்து  நுஸ்ரத் ஜஹான் நீண்ட நாள் காதலரான பிரபல தொழிலதிபர்  நிகில் ஜெயினை துருக்கியில் உள்ள போட்ரம் என்ற இடத்தில் கடந்த 19ஆம் தேதி  திருமணம் செய்து கொண்டார். இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். 

 

இந்த திருமணத்தில் திரிணாமுல் கட்சி சார்பாக களமிறக்கப்பட்டு வெற்றிபெற்ற மிமி சக்ரபோர்த்தியும் 
 கலந்து கொண்டார். இந்த திருமணம் காரணமாக நுஸ்ரத்  மற்றும்  மிமி சக்ரபோர்த்தி இருவரும் எம்,பியாக பதவியேற்றுக் கொள்ளவில்லை . 

 

இந்நிலையில் இன்று மக்களவைக்கு வந்த இருவரும் எம்.பிக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.  வங்க மொழியில் பதவியேற்று கொண்ட அவர்கள் , வந்தே மாதரம், ஜெய் ஹிந்த், ஜெய் பங்களா என்று  முழங்கியது குறிப்பிடத்தக்கது.