ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்!ஒரு வாரம் பெட் ரெஸ்ட்!

 

ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்!ஒரு வாரம் பெட் ரெஸ்ட்!

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஒருவாரம் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும், மன அழுத்த இல்லாத வகையில் அவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அப்பல்லோ அறிவுறுத்தியிருக்கிறது.

ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்!ஒரு வாரம் பெட் ரெஸ்ட்!

கடந்த 25ம் தேதி அன்று உடல் சோர்வினால் ரஜினிகாந்த் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் சோர்வு அதிகமாக இருந்ததால், அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்தவர்களுக்கு நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ரஜினிக்கும் கொரொனா பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனையில் ரஜினிக்கு கொரோனா இல்லை என்பதும் , தொற்றுக்கான அறிகுறிகளும் இல்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து உடல் சோர்வுக்கான பரிசோதனையில், ரஜினிக்கு ரத்தம் அழுத்தம் சீராக இல்லை என்பது தெரியவந்தது. அதனால் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறுவுறுத்தினர்.

ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்!ஒரு வாரம் பெட் ரெஸ்ட்!

நேற்றைய தினம் அவரது உடல்நி்லையில் முன்னேற்றம் தெரிந்ததாக அப்பல்லோ தெரிவித்தது. ஆனாலும் இன்றைக்கு காலையிலும் சில பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால், அந்த சோதனைகளுக்கு பிறகே எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அப்பல்லோ தெரிவித்திருந்தது.

அதன்படி இன்று காலையில் நடந்த பரிசோதனைகளுக்கு பிறகு ரஜினிகாந்த் உடனே டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று அப்பல்லோ முடிவெடுத்தது. இதன்பிறகே இன்று மாலையில் ரஜினிகாந்த் டிஸ்சார் ஆனார்.

ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்!ஒரு வாரம் பெட் ரெஸ்ட்!