மக்கள் ஊரடங்கு தினத்திலும் போராட்டத்தை கைவிடாத ஷாஹீன் பாக் பெண்கள்.. போராட்டக்காரர்களின் எண்ணிக்கை குறைந்தது

 

மக்கள் ஊரடங்கு தினத்திலும் போராட்டத்தை கைவிடாத ஷாஹீன் பாக் பெண்கள்.. போராட்டக்காரர்களின் எண்ணிக்கை குறைந்தது

மக்கள் ஊரடங்கு நேற்று கடைப்பிடிக்கப்பட்ட போதிலும், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தை ஷாஹீன் போராட்டக்காரர்கள் கைவிடவில்லை. இருப்பினும் நேற்று போராட்டக்காரர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து இருந்தது.

[21:36, 3/22/2020] Gps: டெல்லியில் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பெண்கள் மற்றும் குழந்தைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என மத்திய அரசு விளக்கம் கொடுத்த போதிலும் அவர்கள் தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஷாஹீன் பாக் போராட்ட பகுதி

தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் வேளையிலும் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை கைவிட மறுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இருப்பினும், ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை கைவிடவில்லை. அதேசமயம் நேற்று ஷாஹீன் பாக்கில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்தது.

ஷாஹீன் பாக் போராட்ட பகுதி

ஷாஹீன் பாக்கில் போராட்டக்காரர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து இருந்தனர். மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் இடைவெளி விட்டு அமர்ந்து போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். முன்னதாக போராட்டம் நடக்கும் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டினர்.