பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

 

பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

இன்று காலை 9.28 மணிக்கு வெற்றிகரமாக இந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக் கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் விண்ணில் பாயந்தது. 

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று காலை 9.28 மணிக்கு வெற்றிகரமாக இந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக் கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் விண்ணில் பாயந்தது. 

rtocket

மொத்தம் 1,625 கிலோ எடை கொண்ட இந்த அதிநவீன செயற்கைக்கோள், பூமியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 சாய்வு கோணத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்தவாறே பூமியை தொடர்ந்து கண்காணிப்பதுடன், அதி நவீன தரத்தில், மிக மிக துல்லியமாக பூமியைப் புகைப்படம் எடுத்து அனுப்பும் திறன் கொண்டது.

rocket

இரவு நேரத்திலும் மிகத் தெளிவாகப் படம் பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். இதன் மூலமாக பேரிடா் பாதிப்பு போன்றவற்றை முன்பே அறிந்து கொள்வது, ராணுவ எல்லைப் பாதுகாப்பு, தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் போன்றவற்றை எளிதாக கண்காணிக்கலாம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இது செயல்பாட்டில் இருக்கும் என இஸ்ரோ சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.