பயணிகள் கண்முன்னே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

 
train

தெலுங்கானா மாநிலத்தில் பயணிகள் கண்முன்னே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டம் ரயில் நிலையத்தில் பயணிகள்  பார்த்துக் கொண்டிருக்கும் போதே இளைஞர் ஒருவர்  ரயில் முன்பு  பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரனை செய்ததில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் குமார் தனது தாத்தாவுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள ஹார்டுவேர் கடையில் பணி புரிந்து வந்தார். 

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினர் சஞ்சய் குமாருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சூழலில் ராமகுண்டம் ரயில் நிலையத்தில் பெங்களூரில் இருந்து புதுடில்லி சென்று கொண்டிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு நின்று தற்கொலை செய்து கொண்டார். இதனை நேரில் கண்ட  அங்கிருந்த பயணிகள் பீதியடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.