நேருவின் குடும்பமே காமவெறி பிடித்தது! வசைப்பாடிய பாஜக எம்.எல்.ஏ 

நேருவின் குடும்பமே காமவெறி பிடித்தது! வசைப்பாடிய பாஜக எம்.எல்.ஏ 

இந்தியாவில் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவை பெண் பித்து பிடித்தவர் என்றும், அவருடைய குடும்பமே காமவெறி பிடித்த குடும்பம் என்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. விக்ரம் சிங் சைனி  கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முசாஃபர்நகரிலுள்ள கதெளலி தொகுதி எம்எல்ஏவான விக்ரம் சிங் சைனி, பேஸ்புக்கில் அண்மையில் உலக நாடுகளின் தலைவர்களுடன் மோடி எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க், மோடியை பார்ப்பது போன்ற காட்சியை மேற்கோள்காட்டி, பாரத மாதாவைதான் மோடி பார்ப்பார் என்றும், அவர் நேரு அல்ல, மோடி என்று பதிவிட்டிருந்தார்.

Vikram singh saini

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஜவஹர்லால் நேரு பெண் பித்தர், அவருடைய குடும்பமே காமவெறி பிடித்தது. ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை மீட்டபிறகு, அவர்களது குடும்பம் இந்தியாவை இரண்டாக பிரித்தது. ராஜீவ் காந்தியும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்” என்று கூறினார்.