“நாங்க பெங்களூர்ல பெரிய பிஸ்தா “-என தாக்கிய வாலிபர்களை தூக்கிய போலீஸ் 

“நாங்க பெங்களூர்ல பெரிய பிஸ்தா “-என தாக்கிய வாலிபர்களை தூக்கிய போலீஸ் 

பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் ஏர்போர்ட் சாலையில்  திங்கள்கிழமை போக்குவரத்து போலீசார் தடுப்புகளை வைத்து போக்குவரத்தை திருப்பி விட்டுக்கொண்டிருந்தனர். ஏனென்றால் ஒரு மத சம்பந்தமான நிகழ்ச்சி அந்த பகுதியில் நடைபெற்றது.

போக்குவரத்து தடுப்பை உடைத்து போலீசை தாக்கிய வழக்கில் பெங்களூருவில் நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 

பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் ஏர்போர்ட் சாலையில்  திங்கள்கிழமை போக்குவரத்து போலீசார் தடுப்புகளை வைத்து போக்குவரத்தை திருப்பி விட்டுக்கொண்டிருந்தனர். ஏனென்றால் ஒரு மத சம்பந்தமான நிகழ்ச்சி அந்த பகுதியில் நடைபெற்றது.

police

அப்போது அந்த வழியே உள்ளூரை சேர்ந்த  மோகன், ஹரிஷ், ராமையா, ஜதின் என்ற நான்கு பேர் ஒரு காரில் வந்து அந்த தடுப்புகளை எடுக்க கோரினார்கள். ஆனால் அதற்கு மறுப்பு சொன்ன போலீசார் அவர்களை மாற்று வழியில் செல்லுமாறு கூறினார்கள். மீண்டும் அதற்கு மறுத்த அவர்கள் அந்த வழியாக போக பாஸ் கேட்டார்கள். அதற்கு போலீசார் தர மறுத்ததும், அவர்கள் நால்வரும் சேர்ந்து அந்த தடுப்புகளை அகற்ற முயன்றார்கள், அப்போது அவர்களை போலீசார் தடுத்தும் அவர்கள் நால்வரும் நந்திஸ் என்ற இன்ஸ்பெக்டரையும், 3 கான்ஸ்டபிளையும் தாக்கினார்கள். உடனே மற்ற போலீசார் சேர்ந்து அவர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.