தெலங்கானாவில் ஜூன் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

 

தெலங்கானாவில் ஜூன் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

இந்தியாவில்  கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது. அதேபோல் தமிழகத்தில் 621பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய நிலவரப்படி 5 பேர் பலியாகினர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

ஊரடங்கு உத்தரவு

இந்நிலையில் தெலங்கானாவில் 321 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7  பேர் உயிரிழந்துள்ளனர்,மேலும் 34 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஏப்.14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தெலங்கானாவில் ஜூன் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.