திருப்பதியில் ரெட் அலர்ட்: ஏழுமலையான் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு!

 

திருப்பதியில் ரெட் அலர்ட்:  ஏழுமலையான் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குப் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குப் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

police

இலங்கை வெடிகுண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் சிலர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத் துறை தமிழக டிஜிபிக்கு எச்சரிக்கை விடுத்ததின் மூலம் தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தமிழக எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன. 

tirupati

இந்நிலையில் தமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகளால் திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் சித்தூர் அருகே உள்ள காணிப்பாக்கம் விநாயகர் கோயில் ஆகியவற்றுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்த இரண்டு கோயில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.