கொரோனா பீதி: பள்ளிகளை மூட உத்தரவு!

 

கொரோனா பீதி: பள்ளிகளை மூட உத்தரவு!

டெல்லியில் கொரோனா பாதிப்பால் பள்ளிகளை உடனடியாக மூட அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

டெல்லியில் கொரோனா பாதிப்பால் பள்ளிகளை உடனடியாக மூட அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சீனாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸால் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு ஆக்ராவில் இருந்த இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குழுவினருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் டெல்லியில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். 

Schools

இந்நிலையில் கொரோனா பரவல் எதிரொலியால் டெல்லியில் மார்ச் 31-ம் தேதி வரை ஆரம்பப் பள்ளிகளை மூட டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆரம்பப் பள்ளிகள் மூடப்படுவதாக அனைத்து பள்ளிகளும் அறிவித்துள்ளன. மேலும் அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யவும் டெல்லி அரசு  தற்காலிக தடை விதித்துள்ளது.