கீழ் திருப்பதி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயம்!

 

கீழ் திருப்பதி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயம்!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கீழ் திருப்பதியில் திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவில் உள்ளது. இங்கு, உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன. இத்தகவல் நேற்று மாலையில் கோவிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் மூலம் தெரிய வந்தது.

இதையடுத்து கோவிந்தராஜ சாமி கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைத் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியில் இருந்த அர்ச்சகர்கள், ஊழியர்களிடம் நள்ளிரவு முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். காணாமல் போன கிரீடத்தைக் கண்டு பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.