காளைக்கும் வெற்றி! கரடிக்கும் வெற்றி! இதுதாங்க இன்றைய பங்குச் சந்தை நிலவரம்

காளைக்கும் வெற்றி! கரடிக்கும் வெற்றி! இதுதாங்க இன்றைய பங்குச் சந்தை நிலவரம்

இந்த வாரத்தின் 4வது வர்த்தக தினமான இன்று தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 7 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது. ஆனால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 15 புள்ளிகள் சரிந்தது. 

இந்த வாரத்தின் 4வது வர்த்தக தினமான இன்று தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 7 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது. ஆனால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 15 புள்ளிகள் சரிந்தது. 

stock market

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடக்கம் சரிவுடனேயே ஆரம்பித்தது. யெஸ் பேங்க் முன்னாள் சி.இ.ஓ. மீண்டும் யெஸ் பேங்க் வர்த்தகத்தில் தலையிட மாட்டேன் என்று சொன்னது. ஜெட்ஏர்வேஸ் பங்கு வர்த்தகத்துக்கு கட்டுப்பாடு விதிக்க பங்குச் சந்தைகள் முடிவு செய்தது போன்ற காரணங்களால் பங்குச் சந்தையில் தள்ளாட்டம் ஏற்பட்டது. இருப்பினும் வர்த்தகத்தின் இறுதி நேரத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டியதால் சரிவிலிருந்து பங்குச் சந்தைகள் மீள தொடங்கின. 

ஐ.டி., உலோகம், பொதுத்துறை வங்கி, மற்றும் வாகன துறையை சேர்ந்த நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்தனர். அதேசமயம் நிப்டி 50 நிறுவனங்களில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ்,ஜீ என்டர்டெயின்மெண்ட் மற்றும் பாரத்  பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களின் பங்கு விலை மளமளவென உயர்ந்தது. அதேசமயம் யெஸ் வங்கி, மாருதி, இந்தியன் ஆயில் போன்ற நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

stock market

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 15.45 புள்ளிகள் குறைந்து 39,741.36 புள்ளிகளில் நிலை கொண்டது. இருப்பினும் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 7.85 புள்ளிகள் உயர்ந்து 11,914.05 புள்ளிகளில் முடிவுற்றது.