ஓலா பைக் டாக்சியில் பயணித்த இளைஞர் பலி; கேள்விக்குறியாகும் பயணிகள் பாதுகாப்பு!

 

ஓலா பைக் டாக்சியில் பயணித்த இளைஞர் பலி; கேள்விக்குறியாகும் பயணிகள் பாதுகாப்பு!

இந்நிறுவனங்களில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள பெரும்பாலான ஓட்டுநர்களால், தங்களது பயணிகளுக்கு ஹெல்மெட் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஹைதராபாத்: ஓலா பைக் டாக்சியில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி கால் டாக்சி நிறுவனமான ஓலா, ஆட்டோ, கார்கள் மூலம் சேவை வழங்கி வந்த நிலையில், புதிதாக இரு சக்கர வாகன சேவையையும் இணைத்தது. இதையடுத்து, இருசக்கர வாகனத்தின் மூலமாக பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து சென்று வருகிறது அந்நிறுவனம்.

ola

ஆட்டோவை விட இரு சக்கர வாகன கட்டணம் குறைவு என்பதால் வாடிக்கையாளர்கள் கணிசமாக இதற்கு ஆதரவு தர ஆரம்பித்துள்ளனர். இது ஒருபுறம் இருந்தாலும், பைக் டாக்சிகளில் பயணிக்கும்போது விபத்து ஏற்படும் அபாயங்களும் இருப்பதால் இதற்கு ஒருசாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவினாஷ் எனும் இளைஞர், Cyber Towers பகுதியில் இருந்து செக்கந்திரபாத் செல்வதற்காக ஓலா பைக் டாக்சியை புக் செய்துள்ளார். வாகனமானதும் பஞ்சகுட்டா அருகே சென்ற போது, எதிர்பாரா விதமாக லாரி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அவினாஷ் சம்வ இடத்திலேயே  உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டார்.

ola

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவினாஷ் ஹெல்மெட் அணியாததே உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் ஓலா தவிர, உபெர், ரேபிடோ போன்ற நிறுவனங்களும் பைக் டாக்சி சேவையை அளித்து வருகிறது. இந்நிறுவனங்கள் அனைத்தும், தங்களது வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக ஹெல்மெட் வழங்க வேண்டும். ஆனால், இந்நிறுவனங்களில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள பெரும்பாலான ஓட்டுநர்களால், தங்களது பயணிகளுக்கு ஹெல்மெட் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஓலா நிறுவனத்தின் பைக் டாக்ஸிக்கான முக்கிய விதிகளாக, ஐஎஸ்ஐ சான்றிதழ் பெற்ற ஹெல்மெட் மற்றும் முதலுதவி பெட்டி உள்ளிட்டவைகள் இருக்க வேண்டும். ஆனால், இவை பெரும்பாலும் காணப்படுவதில்லை. மேலும், ஹெல்மெட் கொடுக்கப்படவில்லை என்றால், தாங்கள் புக் செய்த பயணத்தை ரத்து செய்யுமாறு ஓலா அறிவுறுத்துகிறது. இருப்பினும், அதற்கான அறிவுறுத்தல்கள் ஏதும் பயணத்தை முன்பதிவு செய்யும் போது அதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

ஒரு காருக்கு பெயர் வைப்பதில் இவ்வளவு அக்கப்போரா…!