எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் திடீர் சந்திப்பு: பாஜக ஆதரவுடன் மாண்டியாவில் களமிறங்கும் சுமலதா?!

 

எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் திடீர் சந்திப்பு: பாஜக ஆதரவுடன் மாண்டியாவில் களமிறங்கும் சுமலதா?!

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகை சுமலதா பாஜக மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்த்தித்துள்ளார்.  

பெங்களூரு: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகை சுமலதா பாஜக மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்த்தித்துள்ளார்.  

 

அதிருப்தி அடைந்துள்ள சுமலதா

ambreesh ttn

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான அம்பரீஷின் மனைவி சுமலதா கர்நாடகாவின் மண்டியா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதன்படி ஆதரவாளர்களைச் சந்தித்து, ஆதரவு திரட்டினார்.  ஆனால்  காங்கிரஸ் தலைமையோ, மண்டியா தொகுதியை குமாரசாமியின் மஜதவுக்கு ஒதுக்கியுள்ளது. அங்கு முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில், களமிறங்கவுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள சுமலதா, மண்டியாவில் சுயேச்சையாகக்  களமிறங்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் சந்திப்பு 

sumalatha ttn

இந்நிலையில், நேற்று நடிகை சுமலதா முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தார். அப்போது  மண்டியாவில் சுயேச்சையாகக் களமிறங்கும் தனக்கு பாஜகவின் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. 

ஆதரவு கேட்ட சுமலதா 

sumaltha ttn

இந்த சந்திப்பு குறித்து பேசிய சுமலதா, ‘எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பூர்வீகம் மண்டியா என்பதால் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். பாஜகவில் இணைவது குறித்து எதுவும் பேசவில்லை’என்றார். எஸ்.எம்.கிருஷ்ணாவோ , ‘சுமலதாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக பாஜக மேலிடம்தான் முடிவு செய்யும். மேலிடத்தில் பேசிவிட்டு வரும்,  18-ம் தேதிக்குள் முடிவு சொல்வதாகக் கூறியிருக்கிறேன்’ என்று விளக்கமளித்தார்.

 
சுமலதாவின் அரசியல் வியூகம்

suma ttn

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அம்பரீஷ் காங்கிரஸை சேர்ந்தவர். அதனால் அவரது மனைவி பாஜக வேட்பாளராக நிற்கும் பட்சத்தில்,  அம்பரீஷ் ஆதரவாளர்கள் தாமரைக்கு வாக்களிக்க மாட்டார்கள்.  அதனால் சுமலதா  பாஜக வேட்பாளராகக் களமிறங்கினால் அவரால் வெற்றி பெற முடியாது. அதன் காரணமாகத் தான் அவர்  சுயேச்சையாகக் களம் காண திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.