உளவுத்துறை அதிகாரிக்கு 40 இடங்களில் கத்திக்குத்து : வாழ்நாளில் இதுபோன்ற ஒரு கொடூர கொலையைப் பார்த்தது இல்லை என மருத்துவர்கள் தகவல்!

 

உளவுத்துறை அதிகாரிக்கு 40 இடங்களில் கத்திக்குத்து : வாழ்நாளில் இதுபோன்ற ஒரு கொடூர கொலையைப் பார்த்தது இல்லை என மருத்துவர்கள் தகவல்!

குறிப்பாக  உளவுத் துறை அதிகாரி அங்கித் சர்மா மர்ம கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது.  இதில் 38 பேர் பலியாகியுள்ளனர். இதில் குறிப்பாக  உளவுத் துறை அதிகாரி அங்கித் சர்மா மர்ம கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

அவரது உடலானது ஜாப்ராபாத் பகுதியில் உள்ள அவரது  வீட்டின் அருகே உள்ள  கழிவுநீர் கால்வாயில்  கண்டெடுக்கப்பட்டது. பின்னர்  அங்கித் சர்மாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  ஆம் ஆத்மி பிரமுகர் தாஹீர் உசேனின் ஆதரவாளர்களே தனது மகனைக் கொன்றதாக தந்தை ரவீந்தர் சர்மா குற்றம்சாட்டினார்.  இதனால் அவர் தாஹீர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில் அங்கித் சர்மா உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள்,அவரின் உடலில் 40ற்கும் மேற்பட்ட இடங்களில் கூர்மையான பொருளால் குத்தியுள்ளனர்  என்றும் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு கொடூர கொலையைப் பார்த்தது இல்லை  என்று அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளனர். இதன் மூலம் அவர் நீண்ட நேரம் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மத்திய உளவுத் துறை அதிகாரியின் இந்த  கொடூர கொலை  நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.