ரூ.94 ஆயிரம் கோடியை பங்குச் சந்தையில் இழந்த முதலீட்டாளர்கள்! சென்செக்ஸ் 190 புள்ளிகள் வீழ்ச்சி….

 

ரூ.94 ஆயிரம் கோடியை பங்குச் சந்தையில் இழந்த முதலீட்டாளர்கள்! சென்செக்ஸ் 190 புள்ளிகள் வீழ்ச்சி….

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. சென்செக்ஸ் 190 புள்ளிகள் வீழந்தது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. மேலும்,  2019-20ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. பொருளாதார ஆய்வறிக்கையை முதலீட்டார்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தது. இது போன்ற சாதகமான அம்சங்கள் காணப்பட்டதும் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.

பொருளாதார ஆய்வறிக்கை

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், கோடக்மகிந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, பார்தி ஏர்டெல், டெக்மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ மற்றும் ஹீரோமோட்டோகார்ப் உள்பட 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஓ.என்.ஜி.சி., பவர்கிரிட், டி.சி.எஸ். மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்பட 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 981 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,421 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 166 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.156.59 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.94 ஆயிரம் கோடியை இழந்தனர்.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 190.33 புள்ளிகள் குறைந்து 40,723.49 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 73.70 புள்ளிகள் வீழ்ந்து 11,962.10 புள்ளிகளில் நிலை கொண்டது.