ஹபீஸ் சயீத்தின் தீவிரவாத குழுவுக்கு கோடிக் கணக்கில் பணம் கொடுக்கிறோம்- உண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்

 

ஹபீஸ் சயீத்தின் தீவிரவாத குழுவுக்கு கோடிக் கணக்கில் பணம் கொடுக்கிறோம்- உண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்

மும்பை தாக்குதலில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்புக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி செய்கிறோம் என பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் இஜாஸ் அகமது ஷா ஒப்புக்கொண்டார்.

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராக இருந்து வருபவர் இஜாஸ் அகமது ஷா. அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் மிகவும் பவர்புல் அமைச்சராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் அந்நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தானை இதற்கு முன் ஆண்டவர்கள் நாட்டை சிதைத்து வைத்து இருக்கிறார்கள். 

தீவிரவாதிகள்

காஷ்மீர் விவகாரத்தில் உலக அமைப்புகளிடம் ஆதரவு திரட்டுவதில் பாகிஸ்தான் தோல்வி அடைந்து விட்டது. அவர்கள் (இந்தியா) காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கிறார்கள். அதனால் மருந்து இல்லை என்று நாம் சொல்கிறோம். ஆனால் மக்கள் ( உலக முழுவதும்) நம்மை நம்பவில்லை. மாறாக இந்தியாவை நம்புகிறார்கள்.

ஹபீஸ் சயீத்

ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா போன்ற குறிப்பிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கிறோம். குறிப்பாக ஹபீஸ் சயீத்தின் தீவிரவாத அமைப்புக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கிறோம். தற்போது அந்த அமைப்புகளை கட்டாயம் பிரதான அரசியல் நீரோட்டத்துக்கு  கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை பாகிஸ்தானின் முக்கிய அமைச்சரே ஒப்புக் கொண்டு இருப்பது தற்போது இம்ரான் கானுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.