விறுவிறு, சறுசறுவென சரிந்த ஜெட்ஏர்வேஸ் பங்கு விலை…..பீதியில் முதலீட்டாளர்கள்…… 

 

விறுவிறு, சறுசறுவென சரிந்த ஜெட்ஏர்வேஸ் பங்கு விலை…..பீதியில் முதலீட்டாளர்கள்…… 

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமான துறையில் சிறப்பாக செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் என்றால் அது ஜெட் ஏர்வேஸ்தான். 1993ம் ஆண்டு விமான சேவையில் காலடி எடுத்து வைத்த ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் அந்த துறையை சேர்ந்த நிறுவனங்கள் ஆச்சரியப்படும் வகையில் சீரும் சிறப்பாக வளர்ச்சி கண்டு வந்தது.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமான துறையில் சிறப்பாக செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் என்றால் அது ஜெட் ஏர்வேஸ்தான். 1993ம் ஆண்டு விமான சேவையில் காலடி எடுத்து வைத்த ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் அந்த துறையை சேர்ந்த நிறுவனங்கள் ஆச்சரியப்படும் வகையில் சீரும் சிறப்பாக வளர்ச்சி கண்டு வந்தது. நரேஷ் கோயல் தலைமையிலான ஜெட்ஏர்வேஸ் தனது விமான சேவையை மெல்ல மெல்ல விரிவுப்படுத்தியது. குறுகிய காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவை நிறுவனமாக உருவெடுத்தது.

jet airways

2008ம் ஆண்டில் மிகப்பெரிய உலக பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட போதும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் வழக்கம் போல் லாபத்தில்தான் ஓடியது. அப்படி செயல்பட்டு வந்த ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தின் மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. இப்பம் நிதி நெருக்கடி காரணமாக சிறகொடிந்த பறவையாக விமானங்கள் பறக்காமல் நிறுத்தி வைக்கபட்டுள்ளன. அது முதலே பங்குச் சந்தையில் ஜெட்ஏர்வேஸ் பங்கு விலை இறங்குமுகத்தில் இருந்து வருகிறது.

ஏற்கனவே பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கியிருந்த ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் நிதி நெருக்கடியை சமாளிக்க வங்கிகளிடம் மேலும் கடன் கேட்டது. ஆனால் எஸ்.பி.ஐ. தலைமையில் ஒண்றினைந்த வங்கிகள், ஜெட்ஏர்வேஸ் இயக்குனர் குழுவிலிருந்து அதன் நிறுவனர் நரேஷ் கோயல் விலகினால் கடன் தருவதாக கூறின. அதனை நம்பி நரேஷ் கோயலும் இயக்குனர் குழுவிலிருந்து வெளியேறினார். அதனைதொடர்ந்து ஜெட்ஏர்வேஸ் நிர்வாகத்தை தங்கள் பிடிக்குள் வங்கிகள் கொண்டு வந்தன. ஆனால் கொடுப்பதாக சொன்ன கடனை வங்கிகள் கொடுக்கவில்லை. மேலும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்று கொடுத்த கடனை வசூலிப்பதில் தீவிரம் காட்டின.

stock market

இது போன்ற செய்திகளால் ஜெட்ஏர்வேஸ் பங்குகளின் தினந்தோறும் சரிவை சந்தித்து வந்தன. இந்த நிலையில், வரும் 28ம் தேதி முதல் சந்தைகளில் ஜெட்ஏர்வேஸ் நிறுவன பங்குகளின் மீதான வர்த்தகத்துக்கு கட்டுப்பாடு விதிக்க பங்குச் சந்தை அமைப்புகள் ( மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள்) முடிவு செய்துள்ளன. இந்த தகவல் வெளியானதும் ஜெட்ஏர்வேஸ் பங்கின் விலை தாறுமாறாக குறைந்தது. 

இன்று மும்பை பங்குச்சந்தையில் ஜெட்ஏர்வேஸ் பங்கு விலை சுமார் 16.71 சதவீதம் குறைந்தது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் அந்த பங்கின் விலை ரூ.110.40ஆக இருந்தது. ஆனால் இன்று பங்குச் சந்தைகளின் முடிவால் அந்த பங்கின் விலை கடுமையாக சரிந்தது. ஒரு கட்டத்தில் பங்கின் விலை ரூ.84.80-ஆக குறைந்தது. இருப்பினும் வர்த்தகத்தின் முடிவில் சிறிது ஏற்றம் கண்டு ரூ.91.95-ல் முடிவுற்றது. விலை இந்த அளவுக்கு குறைந்ததால் முதலீட்டாளர்கள் பங்கை வைத்திருப்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.