வாகன காலாவதி கொள்கையால் (ஸ்கிராப்பேஜ் பாலிசி) ரூ.43 ஆயிரம் கோடி வர்த்தகம் உருவாகும்…. நிபுணர்கள் தகவல்

 

வாகன காலாவதி கொள்கையால் (ஸ்கிராப்பேஜ் பாலிசி) ரூ.43 ஆயிரம் கோடி வர்த்தகம் உருவாகும்…. நிபுணர்கள் தகவல்

இந்தியாவில் நன்கு வரையறுக்கப்பட்ட வாகன காலாவதி கொள்கையை கொண்டு வந்தால், ஆண்டுக்கு ரூ.43 ஆயிரம் கோடி வர்த்தக வாய்ப்பை கொண்ட ஒரு தொழிற்துறையை சொந்தமாக உருவாக்க உதவும் என வாகன துறை நிர்வாகிகள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சாலை பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட பழைய வாகனங்களிலிருந்து எஃகு, தாமிரம் மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்களை மறுசுழற்சி செய்வதால் அவற்றின் இறக்குமதியை குறைக்க உதவும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. சாலையிலிருந்து பழைய வாகனங்களை அகற்றுவது காற்று மாசுவை குறைக்க உதவும். மேலும் பழைய வாகனங்களை காட்டிலும் புதிய வாகனங்களின் எரிபொருள் திறன் அதிகமாக என்பதால் மத்திய அரசின் பெட்ரோலிய இறக்குமதி செலவினம் குறையும்.

நிதின் கட்கரி

இதனை கருத்தில் கொண்டு பழைய வாகனங்களை சாலையிலிருந்து நீக்கும் நோக்கில் வாகன காலாவதி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த மாதம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வாகன காலாவதி கொள்கை முன்வைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் தெரிவித்தார். 

காற்று மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்கள்

வாகன காலாவதி கொள்கையை வாகன துறையை சேர்ந்தவர்கள் அதிக எதிர்பார்க்கின்றனர். இந்த துறையை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் நிபுணர்கள் இது தொடர்பாக கூறியதாவது: இந்தியாவில் நன்கு வரையறுக்கப்பட்ட வாகன காலாவதி கொள்கையை கொண்டு வந்தால், ஆண்டுக்கு ரூ.43 ஆயிரம் கோடி வர்த்தக வாய்ப்பை கொண்ட ஒரு தொழிற்துறையை சொந்தமாக உருவாக்க உதவும். மேலும் அது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும், பொருளாதார வளர்ச்சியை தூண்டும் மற்றும் நீண்ட காலமாக மந்தகதியில் கிடக்கும் வாகன துறைக்கு புத்துயிர் கொடுக்கும் முக்கிய காரணியாகவும் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.