மகாராஷ்டிராவில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு! மாநிலத்தின் மொத்த பாதிப்பு 302 ஆக உயர்வு…

 

மகாராஷ்டிராவில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு! மாநிலத்தின் மொத்த பாதிப்பு 302 ஆக உயர்வு…

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 200 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 200 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும் 8 லட்சத்து 5 ஆயிரத்து 707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 40 ஆயிரத்தை எட்டியுள்ளது.  இதனால்  பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.  பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை  வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி மூடவைக்கக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  

tt

இந்நிலையில் இந்தியாவில்  கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,251 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ள நிலையில் 102 பேர் குணமாகியுள்ளனர். இதற்கிடையில் மகாராஷ்டிராவில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த 59 பேருக்கும் , கல்யாண்-டோம்பிவ்லி, புனே, தானே, நவி, மும்பை, வாஷி விரார் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது.