பதவி படுத்தும் பாடு: மத்தியப் பிரதேச ஆளுநரை சந்தித்து முறையிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்!

பதவி படுத்தும் பாடு: மத்தியப் பிரதேச ஆளுநரை சந்தித்து முறையிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்!

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏ-க்களை இழுத்து கவிழ்க்கும் நடவடிக்கையில் பா.ஜ.க ஈடுபட்டு வெற்றியும் பெற்றுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பதவி விலகினாலும் ஆட்சி கவிழாமல் உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தற்போதைக்கு நடைபெறாத நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அம்மாநில ஆளுநரை சந்தித்து முறையிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏ-க்களை இழுத்து கவிழ்க்கும் நடவடிக்கையில் பா.ஜ.க ஈடுபட்டு வெற்றியும் பெற்றுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பதவி விலகினாலும் ஆட்சி கவிழாமல் உள்ளது.

mla

இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் உத்தரவிட்டார். ஆனால், இந்த முடிவை சபாநாயகர்தான் எடுக்க வேண்டும் என்று கூறி கமல்நாத் அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவில்லை. சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க அழைத்துவரப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அப்படியே மத்தியப்பிரதேச ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே, அந்த அரசு பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே, அதை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர், “உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் உரிமைகள் மீறப்படுவது தடுக்கப்படும்” என்றார்.