சிறப்பு அந்தஸ்து நீக்கத்தால் ஏற்பட்ட பலன்களை எடுத்து கூற, அடுத்த வாரம் காஷ்மீர் செல்லும் மத்திய அமைச்சர்கள் குழு!

 

சிறப்பு அந்தஸ்து நீக்கத்தால் ஏற்பட்ட பலன்களை எடுத்து கூற,  அடுத்த வாரம் காஷ்மீர் செல்லும் மத்திய அமைச்சர்கள் குழு!

சிறப்பு அந்துஸ்து நீக்கத்தால் காஷ்மீரில் ஏற்பட்டுள்ள நேர்மறையான தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வை மக்களிடம் பரப்புவதற்காக அடுத்த வாரம் அங்கு மத்திய அமைச்சர்கள் குழு அங்கு செல்ல உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் அந்த புதிய யூனியன் பிரதேசங்கள் உதயமாகின. சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு, அரசியல் தலைவர்கள் காவலில் வைப்பு, தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

மோடியுடன் மத்திய அமைச்சர்கள் (கோப்பு படம்)

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப தொடங்கியவுடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. வீட்டு காவலில் இருந்த தலைவர்கள் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டனர். தற்போது காஷ்மீரில் மக்கள் முற்றிலும் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து நீக்கத்தால் ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நேர்மறையான தாக்கங்கள் மற்றும் பலன்கள் குறித்து அங்குள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் குழு அடுத்த வாரம் அங்கு செல்ல உள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மத்திய அமைச்சர்கள் குழு சென்று அங்குள்ள மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். காஷ்மீர் செல்லும மத்திய அமைச்சர்கள் குழுவில் இடம்பெறும அமைச்சர்களின் பெயர்கள் நாளை இறுதி செய்யப்படும் என தெரிகிறது. காஷ்மீர் செல்லும் அமைச்சர்கள் குழுவில், 36 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்றும், ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 52 இடங்களுக்கு சென்று அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.