ஏ.சி. கேட்ட ப.சிதம்பரம்…. கையை விரித்த அமலாக்கத்துறை

 

ஏ.சி. கேட்ட ப.சிதம்பரம்…. கையை விரித்த  அமலாக்கத்துறை

ஐ.என்.எக்ஸ். மீடியா சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையின் போது தனக்கு வீட்டு உணவு மற்றும் ஏ.சி. வசதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நீதிமன்றத்தில் முன் வைத்தார். ஆனால் ஏ.சி. வசதி செய்து கொடுக்க என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்தது.

ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. சி.பி.ஐ. காவல் முடிந்த பிறகு நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டார். இதற்கிடையே ஐ.என்.எக்ஸ். மீடியா சட்டவிரோத வழக்கில் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வந்தது. ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மனு தாக்கல் செய்தது.

அமலாக்கத்துறை

டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மனு மீதான விசாரணை நேற்று விசாரணை நடைபெற்றது. இறுதியில், ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் வரும் 24ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. முன்னதாக, வீட்டு உணவு, மேற்கத்திய டாய்லெட், மருந்துகள், குடும்பத்தினருடன் சந்திப்பு, ஏ.சி. வசதி ஆகியவை வேண்டி சிதம்பரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். ஏ.சி. வசதி செய்து கொடுக்க அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்தது.

ஐ.என்.எக்ஸ். மீடியா

இதனையடுத்து ப.சிதம்பரத்துக்கு வீட்டு உணவு, மருந்து மாத்திரைகள், வெஸ்டர்ன் டாய்லெட், தினமும் அரை மணி நேரம் உறவினர்களை சந்திக்க அனுமதி போன்றவற்றுக்கு அமலாக்கத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்ததையடுத்து, திஹார் சிறையிலிருந்து ப.சிதம்பரத்தை நேற்று அமலாக்கத்துறை அழைத்து சென்றனர்.