இந்திய அணிக்கு எதிரான T20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி!

 

இந்திய அணிக்கு எதிரான T20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி!

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 3வது டி-20 கிரிக்கெட் போட்டியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றிப்பெற்று சமனில் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இந்திய அணி முனைப்புடன் விளையாண்டது. அதேநேரத்தில் கடந்த ஆட்டத்தில் தங்களை தோற்கடித்த இந்தியாவை பழி வாங்க வேண்டுமென இங்கிலாந்தும் தீவிரமாக விளையாடியது.

Image

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா-கே.எல்.ராகுல் களமிறங்கினர். இந்திய அணிக்கு இன்று தொடக்கமே சரியாக அமையவில்லை. காரணம் இங்கிலந்து பவுலர் மார்க் வுட் வீசிய 3வது ஓவரில், கே.எல்.ராகுல்(0) பவுல்ட் ஆனார். மீண்டும் மார்க் வுட் பந்துவீச்சில் 5வது ஓவரில், ரோகித் சர்மா 15 ரன்களுடன் அவுட் ஆனார், அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 4 ரன்களிலும், சாம் கரண், ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 9 ரன்களிலும் ஹர்திக் பாண்ட்யா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதி வரை நிலைத்து நின்று அதிரடியாக ஆடிய விராட் கோலி, 46 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் விளாசி 77 ரன்கள் அடித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் மற்றும் பேர்ஸ்டோவின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 18.2 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.