நாளை முதல் உள்நாட்டில்…… ஆகஸ்டுக்குள் சர்வதேச விமான போக்குவரத்து சேவை….

 

நாளை முதல் உள்நாட்டில்…… ஆகஸ்டுக்குள் சர்வதேச விமான போக்குவரத்து சேவை….

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது. அது முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. விமானங்கள் அனைத்தும் விமான நிலையங்களில் எந்தவொரு சத்தமும் இல்லாமல் நிம்மதியாக ஓய்வு எடுத்து வருகின்றன.

நாளை முதல் உள்நாட்டில்…… ஆகஸ்டுக்குள் சர்வதேச விமான போக்குவரத்து சேவை….

இம்மாத தொடக்கத்தில் உள்நாட்டில் விமான போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கு மத்திய அரசு எப்போது அனுமதி அளிக்கும் என்ற கேள்வி எழுந்தது.

நாளை முதல் உள்நாட்டில்…… ஆகஸ்டுக்குள் சர்வதேச விமான போக்குவரத்து சேவை….

இந்நிலையில், வரும் ஆகஸ்டு மாதத்துக்குள் நம் நாடு சர்வதேச விமான போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்கும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேஸ்புக் லைவ்வில் கூறியதாவது: முழுமையான சர்வதேச போக்குவரத்து சேவைகள் இல்லையென்றாலும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பருக்குள் சர்வதேச விமானபோக்குவரத்து சேவையை நல்ல சதவீதததுடன் தொடங்க நாம் முயற்சி செய்வோம். என்னால் அதற்கான (சர்வதேச விமான போக்குவரத்து தொடக்கம்) தேதியை குறிப்பிட முடியாது. ஆனால் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்துக்குள் அது இருக்கலாம் என சிலர் சொல்லலாம். என்ன நிலவரம் என்பதை பொறுத்து ஏன் முன்கூட்டியே இருக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய பதில். இவ்வாறு அவர் தெரிவித்தார்.