எல்லையில் படைகள் குவிப்பு…. பதற்றத்தை தணிக்க நாளை மறுநாள் இந்தியா-சீனா இடையே ராணுவ பேச்சுவார்த்தை

இந்திய ராணுவம் லடாக்கின் கிழக்கு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் சில பகுதிகளில் இருநாட்டு வீரர்களும் நேரடியாக கைகலப்பில் ஈடுபட்டனர். மேலும் லடாக் எல்லை பகுதியில் பல்வேறு இடங்களில் சீனா ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் அந்த பகுதிகளில் வீரர்களை குவித்து வருகிறது.

இந்திய-சீன ராணுவ வீரர்கள்

இதனால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலை வருகிறது. இதற்கிடையே வழக்கம் போல் இந்த விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்தது. ஆனால் எல்லையை பிரச்சினையை நாங்களே பேசி தீர்த்து கொள்வோம் என இந்தியா தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் இந்தியா-சீனா இடையே மூத்த தளபதி அளவிலான ராணுவ பேச்சுவார்த்தைகள் நாளை மறுநாள் (ஜூன் 6ல்) நடக்க உள்ளது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்த தகவலை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி செய்தார். மேலும் அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தற்போது என்ன நடக்கிறது.. கணிசமான எண்ணிக்கையிலான பி.எல்.ஏ. (சீன ராணுவம்) துருப்புகள் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளன என்பது உண்மைதான். அது தங்கள் பிரதேசம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது எங்கள் பகுதி என்பது எங்கள் கூற்று. இது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் லெப்டினென்ட் ஜெனரல் அளவிலான அதிகாரிகள் வரும் சனிக்கிழமையன்று தற்போதைய எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையில் இந்திய தூதுக்குழு இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறது என தெரிவித்தாக தகவல்.

Most Popular

பேரனின் பொறுப்பில் திருநெல்வேலி இருட்டு கடை அல்வா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

நெல்லை நெல்லையப்பர் கோயில் கீழ ரத வீதியில் புகழ்பெற்ற இருட்டு கடை அல்வா 100 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இந்த அல்வா கடை தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநில மக்களின் பிரசித்தி...

’கருப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக அறப்போட்டம்!

கந்த சஷ்டி கவசத்தை இழிவாக விமர்சித்தவர்களைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் வரும் வியாழனன்று அறவழி கண்டனப் போராட்டம் நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்துக்களின் கடவுளர்கள் மற்றும்...

முழு முடக்கம் நீட்டிப்பா?- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் கருத்து

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் மாநிலம் முழுக்க முழு ஊரடங்கு கொண்டுவரும் முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் சென்னையில்...

ரூ.50 கோடி மதிப்புள்ள மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர நிதியமைச்சருக்கு திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஊழலை ஒழிக்கிறேன் என்ற பேரில் புழக்கத்தில் இருந்த ரூ 500, 1000 நோட்டுகள் செல்லாது எனக்கூறி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை...
Open

ttn

Close