சீன ஊடுருவலுக்கு எதிரான குரலை புறக்கணித்தால் இந்தியா அதிக விலை கொடுக்க வேண்டியது இருக்கும்.. ராகுல் காந்தி…

எல்லையில் இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். தற்போது ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், சீன ஊடுருவலுக்கு எதிராக தேசபக்தி கொண்ட லடாக்கிகள் குரல் கொடுக்கிறார்கள். அவர்கள் ஒரு எச்சரிக்கையை கத்துகிறார்கள். அவர்களின் எச்சரிக்கையை புறக்கணித்தால் இந்தியா அதிக விலை கொடுக்க வேண்டியது இருக்கும்.

சீன ராணுவம் அமைத்துள்ள முகாம்களை காட்டும் சாட்டிலைட் படம்

இந்தியாவின் பொருட்டு தயவு செய்து அவர்கள் சொல்வதே கேளுங்க என மத்திய அரசை வலியுறுத்தி பதிவு செய்து இருந்தார். மேலும், லடாக்கில் இந்திய பகுதியை சீனர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக சில லடாக் மக்கள் குற்றச்சாட்டுவதாக வெளியான ஒரு ஊடக வீடியோ ஒன்றையும் அதில் பதிவேற்றம் செய்துள்ளார்.

சீன-இந்திய ராணுவ வீரர்கள்

கடந்த ஜூன் 15ம் தேதியன்று கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன வீரர்களை நமது ராணுவ வீரர்கள் தடுத்து அவர்களின் முயற்சியை முறியடித்தனர். அப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து லடாக்கில் என்ன நடந்தது என்பதை சொல்லும்படி மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் நெருக்கடி கொடுத்து வருகிறது. மேலும் இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறது.

Most Popular

ஒருபக்கம் கடன்காரர்களின் டார்ச்சர் மறுபக்கம் மாமியாரின் தொல்லை… கணவனின் இறப்பால் உயிரை மாய்த்த மனைவி… உயிருக்கு போராடும் மகள், மகன்கள்!

தேவகோட்டை அருகே கணவன் இறந்த நிலையில் கடனை கட்டச்சொல்லி டார்ச்சர் செய்ததால் வேதனை அடைந்த மனைவி, மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்தார். இதில் தாய் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் பிள்ளைகள் உயிருக்கு போராடி...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது!

இன்றைய ராசிபலன்கள் 05-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

12 மணிக்கு பூமி பூஜை..12.40-க்கு பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.. மேடையில் 5 பேர் மட்டும்

அயோத்தியில் இன்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கியது. 100 கோடி இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது இன்று நிஜமாக...

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்குக்கும், ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு கிடையாது.. முட்டு கொடுக்கும் சிவ சேனா

மும்பையை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. அதுல் பட்கல்லர் அண்மையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்....