இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி

 

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி வருகிறது. அதேசமயம் ஷிகர் தவான் தலைமையிலும்,டிராவிட்டின் பயிற்சியிலும் இரண்டாம் தர இந்திய அணியை இலங்கைக்கு அனுப்பி உள்ளது பிசிசிஐ.

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி

இதன்படி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன்படி, முதல் ஒருநாள் போட்டி இலங்கையிலுள்ள கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் சானகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் அறிமுக வீரர்களாக இஷன் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் களமிறங்கினர்.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் பனுகா களமிறங்கினர். சுமாரான துவக்கம் தந்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தது. சாஹலின் சுழலில் அவிஷ்கா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் பனுகா 27 ரன்களிலும்,ராஜபக்சே 24 ரன்களிலும், குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த அசலங்கா 39 ரன்களும்,கேப்டன் சனகா 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 240 ரன்கள் கடக்குமா என்று இருந்த இலங்கை அணியை இறுதி கட்டத்தில் வந்த சமீரா கருணரத்னே மீட்டார்.

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி


சிறப்பாக ஆடிய கருணரத்னே 35 பந்துகளில் 43 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சஹல்,குல்தீப் யாதவ்,தீபக் சாகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன்பின் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் தவான் மற்றும் பிரித்திவி சா களமிறங்கினர். முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளுடன் தொடங்கிய பிரித்திவி சா 20 ஓவர் போட்டி போல ஆடினார். அதிரடியாக ஆடிய பிரித்திவி சா 24 பந்துகளில் 43 ரன்கள் குவித்து தனஞ்சயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து தனது அறிமுக போட்டியில் ஆடிய இசன் கிசன் முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பி அட்டகாசமாய் தொடங்கினார். இவரும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போல ஆடி 33 பந்துகளில் அரைசதம் கடந்தார். சிறப்பாக ஆடிய இசன் கிசன் 42 பந்துகளில் 59 ரன்கள் குவித்து சன்டகன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின் வந்த மணிஷ் பாண்டே கேப்டன் தவான் உடன் ஜோடி சேர்ந்தார். பொறுப்பாக ஆடிய கேப்டன் தவான் 61 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

நிதானமாக ஆடி வந்த மணிஷ் பாண்டே 26 ரன்களில் தனஞ்சயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், தவானுடன் ஜோடி சேர்ந்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் 36.4 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 262 ரன்களை எட்டியது. இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் தவான் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 86 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தனது அறிமுக போட்டியிலே அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 31 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.