• July
    23
    Tuesday

Main Area

Main



எல்லோ அலர்ட்டில் கிரிக்கெட் போட்டி| விரக்தியில் இந்தியா

இந்தியா, நியூசிலாந்து
இந்தியா, நியூசிலாந்து
Loading...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா மோதும் போட்டி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சியான விஷயம் ஒன்று வெளியாகியிருக்கிறது. 

ind vs nz


இந்தியா இதுவரையில் இரண்டு போட்டிகளில் தான் விளையாடி உள்ளது. அந்த இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று இருக்கிறது . இதனால் புள்ளிகளின் பட்டியல் அடிப்படையில் இந்திய அணி நான்காம் இடம் வகிக்கிறது. இன்றைய போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் இந்திய அணி  புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க முடியும்.
அதே சமயம் நியூசிலாந்து அணி மிகவும் வலுவாக இருக்கிறது. அந்த அணி 3 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வென்றுள்ளது. இதனால் அந்த அணி முதலிடம் வகிக்கிறது. தற்போது இங்கிலாந்தில் மழை பெய்து வருகிறது. இங்கிலாந்து முழுக்க மிக மிக மோசமாக மழை பெய்து வருவதால் உலகக் கோப்பை போட்டி தடை பட்டு இருக்கிறது. இதுவரை மூன்று போட்டிகள்  மழையால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் அங்கு தொடர்ந்து மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது. இலங்கை வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. இதுதான் இந்திய வீரர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

ind vs nz

அப்படி இன்று இரு அணிகளுக்கிடையே போட்டி நடைபெறாவிட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கும். அப்படிக் கிடைத்தால், புள்ளி பட்டியலில் இந்திய அணி எந்த மாற்றமும் செய்யமுடியாமல் அதே நான்காவது இடத்தில் தான் நீடிக்க முடியும்.  தற்போது போட்டி நடக்க உள்ள நாட்டிங்காம் மைதானம் இருக்கும் பகுதிக்கு எல்லோ அலர்ட் அளிக்கப்பட்டுள்ளது. இன்று அந்த மைதானத்தில் கண்டிப்பாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கணித்து இருக்கிறார்கள். அப்படியே போட்டி நடைப்பெற்றாலும், டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும். டாஸ் வெல்லும் அணி, முதலில் பேட்டிங் செய்யவே விரும்புவார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.