darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் தொடர்: நாளை கடைசி போட்டி

teamindia
teamindia

-குமரன் குமணன்

வெலிங்டன்: இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் கடைசி போட்டி வெலிங்டன் நகரில் நாளை நடக்கிறது.

முதல் மூன்று போட்டிகளில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றிகளை பெற்ற பின்னர், கடந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகபட்ச பந்துகளை மீதம் வைத்து தோல்வி கண்டது இந்திய அணி.

இதையடுத்து, இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் கடைசி போட்டி வெலிங்டன் நகரில் நாளை நடக்கிறது.

இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கப்தில் விளையாட மாட்டார். அவருக்கு பதில் மன்ரோ அணிக்கு திரும்புவார் என தெரிகிறது. நீஷம் அல்லது சான்ட்னர் நீக்கப்பட்டு ப்ரேஸ்வெல் திரும்ப அழைக்கப்படலாம்.

இந்திய அணியை பொறுத்தவரை தோனி திரும்ப, கார்த்திக் வழிவிட வாய்ப்புண்டு ஓரு வேளை ராயுடு, தோனி, கார்த்திக் என மூவருமே அணியில் இடம்பெறும் நிலையும் வரலாம். ஸ்விங் எடுக்கக்கூடிய இந்த ஆடுகளத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நியூசிலாந்தின் சராசரி ஸ்கோர் 207. இதனை மாற்ற அந்த அணி பேட்ஸ்மேன்கள் தெளிவடைய வேண்டியது அவசியம்.

இந்நிலையில் வெஸ்ட்பேக் மைதானத்தில் விளையாடிய கடந்ந 3 போட்டிகளிலும் தோல்வி கண்ட நியூசிலாந்து அணியை அங்கு இந்திய அணியும் வீழ்த்துமா? 4-1 என்ற நிலையை இத்தொடர் எட்டுமா ? கடந்த போட்டி தந்த படுதோல்வியின் காயம் ஆறுமா? என நாளை தெரியும்.

2018 TopTamilNews. All rights reserved.