“ஐபிஎல்-க்கு கூட இப்படி ஒரு வரவேற்பு இல்ல” – கோடிகளில் சாதனை படைத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்!

 

“ஐபிஎல்-க்கு கூட இப்படி ஒரு வரவேற்பு இல்ல” – கோடிகளில் சாதனை படைத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்!

50 ஓவர் உலகக்கோப்பைக்கு இணையாகப் பேசப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சப்பையாக முடிந்தது உள்ளபடியே கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஐசிசி முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கென்று தனி முக்கியவத்துவம் கொடுத்து இந்தத் தொடரை உருவாக்கியது. ஆனால் கொரோனாவும் மழையும் மொத்தத்தையும் மாற்றியமைத்துவிட்டது. கொரோனாவுக்கு என்ன சம்பந்தம். இந்தத் தொடர் 2019ஆம் ஆண்டு தொடங்கியது.

“ஐபிஎல்-க்கு கூட இப்படி ஒரு வரவேற்பு இல்ல” – கோடிகளில் சாதனை படைத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்!
“ஐபிஎல்-க்கு கூட இப்படி ஒரு வரவேற்பு இல்ல” – கோடிகளில் சாதனை படைத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்!

கொரொனா தாக்கத்தால் போட்டிகள் நடத்தமுடியாமல் போனது. இதையடுத்து ஐசிசி உயர்மட்ட குழு கூடி புதிய விதிமுறைகளை வகுத்தது. அதன்படி, 85 சதவிகித போட்டிகளை மட்டுமே நடத்த முடியும் என்பதால், கொரோனாவால் நடத்தமுடியாமல் போன தொடர்களுக்கு டிராவுக்கான புள்ளிகள் வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இப்படி ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளைக் கடந்தே இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் நியூஸிலாந்தும் தகுதிபெற்றன. ஆனால் லீக் சுற்றுகளில் கொரோனா என்றால் பைனலில் மழை.

“ஐபிஎல்-க்கு கூட இப்படி ஒரு வரவேற்பு இல்ல” – கோடிகளில் சாதனை படைத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்!

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பை தண்ணீர் ஊற்றி அணைத்தது. இவ்வாறு பல்வேறு குறுக்கீடுகள் வந்தவுடன் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராவிதமாக திடீரென்று பரபரப்பின் உச்சத்திற்கு ரசிகர்களை இழுத்துச் சென்றது. கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா வெற்றிவாய்ப்பை இழந்து முடிவில் மொத்த வெற்றியையும் நியூஸிலாந்துக்கு தாரை வார்த்தது. முதல் கோப்பையை வென்றெடுத்து நியூஸிலாந்து வரலாற்றில் இடம்பிடித்தது.

Image

நியூஸிலாந்து மட்டுமல்ல இந்த டெஸ்ட் பைனல் போட்டியே வரலாற்றில் மிக முக்கிய சாதனை ஒன்றையும் பதிவு செய்துள்ளது. கிரிக்கெட் உலக வரலாற்றில் வேறு எந்த போட்டியும் செய்யாத சாதனையை இப்போட்டி செய்துள்ளது. பிரபல ஐபிஎல் போட்டிகளுக்கு கிடைகாத வரவேற்பு டெஸ்ட் போட்டிக்கு கிடைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா, நியூஸிலாந்து இடையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை உலகளவில் 89 பகுதிகளிலிருந்து 17.7 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர். அதில் 13.06 கோடி பேர் நேரலையில் பார்த்துள்ளனர் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் தான். ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்ஷன் சேனல்கள் மூலம் 94.6 சதவீதம் பேர் இப்போட்டியைக் கண்டுகளித்துள்ளனர். ஐசிசியின் பேஸ்புக் பக்கம் மூலம் இந்தப் போட்டியை 42.3 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் 7 கோடி பேர் பார்த்துள்ளனர். இதுதவிர ஐசிசியின் செல்போன் ஆப், வெப்சைட், ட்விட்டர், யூடியூப் ஆகியவை மூலமும் 51.50 கோடி வியூவ்0ஸ் கிடைத்துள்ளதாகவும் ஐசிசி கூறியுள்ளது.